நந்தினி எடுத்த முடிவு, சந்தோஷத்தில் சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

Moondru Mudichu Serial Today Promo Update 03-06-25
Moondru Mudichu Serial Today Promo Update 03-06-25

நேற்றைய எபிசோடில் நீங்க ஒரு மாதிரியா பேசுறீங்க போய் படுங்க என்று சொல்ல தூங்குறதா இன்னிக்கா நான் நிறைய பேசணும் நீ நிறைய பதில் சொல்லணும் இங்கேயே இரு என்று சொல்லிவிட்டு நந்தினியிடம் நீ நல்லா இருக்கியா என்று கேட்க, நல்லா இருக்கேன் என நந்தினி சொல்லுகிறார். விஜி சொன்ன மாதிரி அந்த வட்டிக்காரன் கிட்ட உன்ன பொண்டாட்டின்னு சொல்ல எது தடுக்குதுன்னு கேட்டால அது கரெக்ட்டு தான் ஏன் தெரியுமா என் மனசுல நான் உன்ன பொண்டாட்டியா நினைக்கல, இதுவரைக்கும் உன்கிட்ட ஒரு நாள் ஆவது நீ என் பொண்டாட்டிங்கிற உரிமையில நான் தப்பா நடந்திருக்கேனா என்று கேட்க நந்தினி இல்லை என்று சொல்லுகிறார். நானே நினைக்காத போ இன்னொருத்தன் கேட்கும் போது என்னால பொண்டாட்டின்னு சொல்ல முடியல, நீ என்னை பொறுத்த வரைக்கும் நல்ல ஃப்ரெண்ட், நீ என் பொண்டாட்டி என்று எதுக்கு நான் மத்தவங்க கிட்ட சொல்லணும் என்று கேட்கிறார்.

ஆனா விஜியும் சரி டாடி சரி என்கிட்ட இருந்து அப்படி ஒரு அப்ரோச்ச எதிர்பார்க்கிறார்கள் ஆனால் எனக்கு செட்டாகாது, என்னால ஏத்துக்க முடியாது. ஆனா நீ என்கிட்ட கேட்கலாம் இவ்வளவு தெரிஞ்சும் எதுக்கு தாலி கட்டினான்னு ஆனா அதுக்கும் ஒரு காரணம் இருக்கு அது உனக்கே தெரியும் என்ற கோபப்பட்டு டம்ளரை உடைக்க சுந்தரவல்லி சத்தம் கேட்டு மேலே வருகிறார். நான் எவ்வளவு சொல்லியும் அந்த அர்ச்சனாவை கல்யாணம் பண்ணி வைக்க பார்த்தாங்க, அவளைத் தேடிப் போய் கல்யாணத்தை நிறுத்த சொன்னேன் அவளும் கேக்கல அவ அப்பனும் கேட்கல இவங்க குடும்ப கௌரவத்தை காப்பாத்த நான் கல்யாணம் பண்ணனுமா, இவங்க கௌரவத்தை கெடுக்க தான் நான் இப்படி பண்ணேன் முதல்ல அர்ச்சனாவ கல்யாணம் பண்ணி மறுநாள் டைவர்ஸ் பண்றதுதான் என்னோட பிளான்.

அப்படி பண்ணி இருந்தா சுந்தரவல்லியோட ஸ்டேட்டஸ் கௌரவம் எல்லா போயிருக்கும் அதுதான் என்னோட பிளான் என்று சொல்ல சுந்தரவல்லி அதிர்ச்சியாகிறார். நான் ஒரு பொண்ணு லவ் பண்ண அவ ஏழை பொண்ணு அதனால அந்த பொண்ணு குடும்பத்தை அழிச்சு கடைசியா அந்த பொண்ணு செத்து போயிட்டா என்ற நியூஸ் தான் நான் காதுல கேட்டேன் எந்த கௌரவத்துக்காக இப்படி பண்ணாங்களோ, அவங்க கௌரவத்தை கெடுக்க தான் இப்படி பண்ண ஆனா ஆயிரம் தான் இருந்தாலும் அவ மினிஸ்டர் பொண்ணு ஆனா நீ எங்க வீட்டு தோட்டத்துல வேலை செய்றவரோட பொண்ணு உன்னை கல்யாணம் பண்ணி இந்த வீட்ல வச்சிருந்தா அந்த தாய்க்குலம் தினம் தினம் ரத்தக்கண்ணீர் வடிக்கும் என்ன பத்தி பேசும்போதெல்லாம் தாய்க்குலம் கோவமாவுறாங்க அவங்களால தாங்க முடியல, நான் நெனச்சதை விட அதிகமா அவங்கள கடுப்பேத்திட்ட எனக்கு இது போதும் நம்மளுக்கு கல்யாணம் ஆன அண்ணிக்கு நான் உனக்கு சொல்லிட்டேன் ரூமுக்கு வெளிய மட்டும் தான் பொண்டாட்டின்னு எதை சொன்னா எதை செஞ்சா அவங்களுக்கு எரியுமோ அதுதான் நான் செஞ்சேன் அவ்வளவுதான் என சொல்லுகிறார். சுந்தரவல்லி அப்போ இவங்க புருஷன் பொண்டாட்டியா வாழலையா எல்லாம் நடிப்பு தானா என தெரிந்து கொள்கிறார்.

என் தாய்க்குலத்தை வெறுப்பேத்த கொஞ்சம் அதிகமா அட்வான்டேஜ் எடுத்திருந்தா சாரி, எந்த நேரத்திலும் உன்ன நான் என் பொண்டாட்டியா நினைக்கல, அப்படி யாரோ ஒருத்தர் கேட்கும் போது என்னால எப்படி சொல்ல முடியும். நீ நந்தினியை வைஃபா நினைக்க மாட்டேங்குற என்று டாடி எப்பவும் சொல்லிக்கிட்டு இருப்பாரு, இவங்க எல்லாருக்கும் ஒன்னு புரிய மாட்டேங்குது புருஷன் பொண்டாட்டி உறவு என்றது ஒரு எமோஷன் மஞ்சதாலி கட்டிட்டா அது கிடைத்துவிடுமா, நமக்குள்ள புருஷன் பொண்டாட்டிங்கற எந்த உறவும் கிடையாது. அப்புறம் இன்னொரு விஷயம் இதுவரைக்கும் என் தாய்க்குலத்தை வெறுப்பேத்த தான் நான் வெச்சிருந்த நான் போதும் போதும் என்ற அளவுக்கு பண்ணிட்டேன். உனக்கு என்ன ஆசை உங்க அம்மாச்சி உங்க தங்கச்சிங்க கூட இருக்கணும்னு தானே ஆசை தாராளமா நீ போ நந்தினி. நீ அங்கேயே போயிரு என்று சொல்ல சுந்தரவல்லி சந்தோஷப்படுகிறார் உடனே நந்தினி கண்கலங்கி அழுது என்னால நம்பவே முடியல நிஜமாதான் சொல்றீங்களா ரொம்ப நன்றி என்று கையெடுத்து கும்பிடுகிறார்.

நன்றி எல்லாம் வேண்டாம் நந்தினி, நீ போய் உங்க வீட்ல சந்தோசமா இரு ஆனா இப்ப வேண்டாம் காலைல போ நான் படுத்துட்டு இருந்தனா சூர்யா சார் கிட்ட சொல்லிட்டு போலாம் இல்ல நீ பாட்டுக்கு போயிடு, இதுவரைக்கும் நான் உன்ன ஏதாவது ஹேட் பண்ணி இருந்தா என்ன மன்னிச்சிடு என்று கையெடுத்து கும்பிட்டு விட்டு சூர்யா நீ சந்தோஷமா இருந்தா எனக்கு நிம்மதி என்று சொல்லிக் குடித்துவிட்டு படுத்து விடுகிறார். மறுபக்கம் சுந்தரவல்லி இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு, இன்னையோட இந்த வீட்ட புடிச்ச பீடை போகப்போகுது நான் நிம்மதியா தூங்கப்போகிறேன் என்று சொல்ல மறுப்பக்கம் நந்தினி கண்கலங்கி நிற்கிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி சூர்யா சார் வீட்டை விட்டு போக சொல்லிட்டாரு நாளைக்கு விடிஞ்சதும் கிளம்பிடனும் என்று நந்தினி நினைக்கிறார். மறுபக்கம் அருணாச்சலம் சுந்தரவல்லி இடம் நீ எதுக்கு இப்படி பேசுறன்னு தெரியல என்று சொல்லுகிறார். நாளைக்கு விடிஞ்சதும் உங்க கேள்வி எல்லாத்துக்கும் பதில் தெரிஞ்சிடும் என்று சொல்லுகிறார்.

மறுநாள் காலையில் நந்தினி கோலம் போடுவது டீ போடுவது என எல்லா வேலையும் செய்ய சுந்தரவல்லி வீட்டை விட்டு வெளியே போறதுனால கடைசியா எல்லாத்தையும் செய்றாளா எப்படியோ செஞ்சிட்டு போகட்டும் இந்த வீட்ல இருந்து ஒழிஞ்சா சரி என்று நினைக்க நந்தினி பேக் உடன் வெளியே வருகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Today Promo Update 03-06-25
Moondru Mudichu Serial Today Promo Update 03-06-25