Pushpa 2

நந்தினிக்கு சாப்பாடு கொடுத்த சூர்யா.. வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரைகள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும்,ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

moondru mudichu serial today promo 06-12-2024

moondru mudichu serial today promo 06-12-2024

நேற்றைய எபிசோடில் சூர்யா நந்தினியை கார் மீது இருக்கும் கவரை எடுக்க சொல்ல அதில் நந்தினி சூர்யா என எழுதி இருக்கிறது. இதைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சியாக அருணாச்சலத்திடம் சூப்பரா இருக்கு இல்ல டாடி என்று கேட்கிறார். எப்படி டாடி என் பொண்டாட்டி கார்ல இருந்ததுனால அது தீட்டாயிடுச்சு அதுக்கு பெட்ரோல் ஊத்தி கொளுத்துவாங்களா வேற என்ன பண்ணுவாங்க என்னோட தாய்குலம் இது பார்த்துட்டு சொல்லுங்க என்று சொல்லுகிறார்.

செஞ்ச வேலைக்கு அவங்க ஜெயில்ல இருந்து இருக்கணும் ஆனா என் பொண்டாட்டி கேச வாபஸ் வாங்குனதனால பொழைச்சாங்க.. உடனே சுந்தரவல்லி கோபப்பட அருணாச்சலம் அமைதியாக இருக்க சொல்லுகிறார். நான் பேசியே தீருவேன் என்று சொல்லி நீ பாவம் டாடி இப்படி ஒரு கேரக்டர நீங்க சமாளிச்சு வாழ்ந்து இருக்கீங்களா நீங்க ரொம்ப கிரேட் டாடி என்று சொல்லுகிறார். உடனே கல்யாணத்தை கூப்பிட்டு நீ தானே சமைக்கிற, எல்லாருக்கும் நார்மலா சமைச்சுடு ஆனால் தாய்க்குலத்துக்கு மட்டும் காலையில் அந்தஸ்தை சமைச்சுட்டு மத்தியானத்துக்கு மரியாதையை சமைச்சிடு. டின்னருக்கு ஸ்டேட்டஸ் அந்த ஸ்டேட்டஸ காரம் போட்டு தூக்கலா செஞ்சிடு என்று சொல்லுகிறார். இந்த கார்ல பேர் எழுதினது ஒன்னும் பிரச்சனை இல்ல நாளைக்கு காலையில நந்தினி இல்லம் என்ற பிளக்ஸ் வச்சுடுவேன் என்று சொல்ல சுந்தரவல்லி கோபமாக சென்று விடுகிறார்.

உடனே நந்தினி கோபமாக ஸ்டிக்கரை கிழிக்க சூர்யா அருணாச்சலத்திடம் நிறுத்த சொல்லுங்க டாடி என்று சொல்ல நந்தினி கோபப்பட்டு உங்க அம்மாவ வெறுப்பேத்த நான் தான் கிடைச்சன்னா என்னால முடியல தயவு செஞ்சு திரும்பத் திரும்ப இப்படி பண்ணாதீங்க என்று கையெடுத்து கும்பிடுகிறார். நீங்க கார்ல ஸ்டிக்கர் ஒட்டு அதனால எனக்கு என்ன பிரச்சனை வரும் என் மேல் எப்படி திரும்புவார்கள் என்று எல்லாம் உங்களுக்கு தெரியாதா? இங்க இருந்து தப்பிச்சு போலாம்னு பார்த்தாலும் அதுவும் நடக்க மாட்டேங்குது தயவு செஞ்சு உங்க அம்மாவ வெறுப்பேத்த என்னை யூஸ் பண்ணாதீங்க என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். நந்தினி கருப்பன் சாமி போட்டோ முன் நின்று என்னை எதுக்கு இப்படி சோதிக்கிற என்ன ஊருக்கும் கூட்டிட்டு போக மாட்ற என்ன என் கைவிடுற நீ கைவிட்ட நான் யார் கிட்ட போய் நிற்கிறது எங்க குடும்பத்துக்கு நீ மட்டும் தான் துணை. பிறகு நடந்ததை எல்லாம் சொல்லி என்னை இங்கிருந்து எப்படியாவது கூட்டிட்டு போயிடு என்று வேண்டிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து சூர்யா வருகிறார்.

நீ எதுக்கு ஸ்டிக்கரை கிழிச்ச என்று கேட்க, சொன்னா மட்டும் உங்களுக்கு புரிய போகுதா என்று சொல்ல அப்போ என்ன தண்டம் சொல்றியா என்று கேட்க நான் யாருன்னு உனக்கு தெரியுமா என்று கேட்கிறார் நந்தினி தெரியும் என்று சொல்ல உங்களுக்கு யாராவது ஒருத்தர் கிடைச்சா உங்க அம்மாவ வெறுப்பேத்த என்னவெல்லாம் பண்ணுவீங்க அப்படித்தானே என்று சொல்ல, நீதான் கரெக்டா புரிஞ்சு வச்சிருக்க என்று சொல்லி சிரிக்கிறார். உன்னை யார் கடத்துனது என்று கேட்கிறார். கார் அடையாளம் மற்றும் அடைத்து வைத்திருந்த இடம் ஏதாவது உனக்கு ஞாபகம் இருக்கா. என்று கேட்க இதையெல்லாம் கேட்டு நீங்க என்ன பண்ணப் போறீங்க அதுக்கு நான் அந்த கார்க்குள்ளேயே இருந்து போய் இருக்கலாம் என்று சொல்லி தூங்க செல்ல சூர்யாவும் குடிக்க சென்று விடுகிறார்.

சூர்யா எனக்கு பசிக்குது நந்தினி தோசை சுட்டு தரியா என்று கேட்க, எனக்கு தூக்கம் வருது என்று நந்தினி சொல்லி விடுகிறார். சரி நீ தூங்கு நானே சூட்டுகிறேன் என்று கீழே வருகிறார். கிச்சனுக்கு வந்த சூர்யா கல்யாணம் புஷ்பா என கூப்பிட கல்யாணம் வருகிறார். எனக்கு பசிக்குது தோசை சுட்டுக்கொடு கல்யாணம் பண்றேன்னு சொல்ல கல்யாணம் தோசை ஏற்பாடு செய்ய உடனே அருணாச்சலம் அவரை அனுப்பிவிட்டு நான் செய்றேன் நீ எடுத்துக் கொண்டு வந்து கொடு என்று சொல்ல அருணாச்சலம் சமைக்கிறார்.

பிறகு சூர்யாவிற்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுக்க சூப்பரா இருக்கு டாடி என்று சொல்லி சாப்பிடுகிறார் கொஞ்ச நேரம் கழித்து நீ பண்றதெல்லாம் சரியா இருக்கான்னு யோசிச்சு பாரு சூர்யா என்று அருணாச்சலம் கேட்க அம்மா கோவக்காரி தான் ஆனால் உயிர கொல்ற அளவுக்கு கொலைகாரி கிடையாது என்று சொல்ல அவங்க கொஞ்ச நாளைக்கு முன்னாடி எவ்வளவு பெரிய விஷயம் பண்ணாம தெரிஞ்சு நீங்க எப்படி அவங்களுக்கு சப்போர்ட் பண்றீங்க டாடி என்று கேட்கிறார் பிறகு நந்தினிய நீங்க நல்லா தானே பார்த்துக்க சொல்லி இருக்கீங்க ஆனா நந்தினி ஓட ஸ்டிக்கர் ஒட்டுனதுக்கு அவ எதுக்கு கிழிச்சு போட்டா என்று கேட்கிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா நந்தினிக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு வர, நந்தினி தூங்கிக் கொண்டிருப்பதால் அவரை அனுப்பி சாப்பிட சொல்லுகிறார். எனக்கு வேண்டாம் நீங்க சாப்பிடுங்க சார் என்று சொல்ல நான் 8 சாப்டுருக்கேன் நீ சாப்பிடு என்று சொல்லுகிறார்.

அதோட சேர்த்து நீங்க எதையும் சாப்பிடுங்க என்று சொல்ல, ஓ எனக்கு தெரிஞ்ச போச்சி நான் செஞ்சதா நினைக்கிற அது தானே நான் செய்யல நான் செஞ்சா எப்படி இவ்வளவு சூப்பரா செய்ய முடியும் டாடி தான் செய்தார் உன்கிட்ட கொடுக்க சொன்னாரு என்று சொல்லுகிறார். உடனே நந்தினி நிஜமாவா என்று கேட்க சத்தியமா என்று சூர்யா சொல்லுகிறார். பிறகு நந்தினி தோசையை வாங்கி சாப்பிடுகிறார். நீ சாப்பிட்ட பிறகுதான் நான் தூங்கணும்னு டாடி சொல்லி இருக்காரு என்று சொல்லிவிட்டு நந்தினி சாப்பிட்டு கொண்டு இருக்க சூர்யா படுத்துவிடுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்க்க தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial today promo 06-12-2024

moondru mudichu serial today promo 06-12-2024