சூர்யா சொன்ன வார்த்தை, நந்தினி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தின் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பில் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி ,மாதவி, மாதவியின் கணவர், என மூவரும் காபி குடித்துக் கொண்டிருக்க கல்யாணம் முணுகிக் கொண்டே இருக்க யாருக்கு காபி எடுத்துக்கிட்டு போற என்று கேட்க, அருணாச்சலம் ஐயாவிற்கும் நந்தினி அம்மாவுக்கும் எடுத்துக் கொண்டு போறேன் என்று சொல்ல சுந்தரவல்லி கடுப்பாகி கல்யாணத்தை அறைந்து விடுகிறார். யாருடா உனக்கு அம்மா, அவளும் உன்ன மாதிரி ஒரு வேலைக்காரி தான் என்று மிரட்டுகிறார். நந்தினி என்று சொன்னால் இவர் அடிக்கிறாரு நந்தினி அம்மான்னு சொன்னா இந்த அம்மா அடிக்கிறாங்க இன்னைக்கு எல்லாம் என் ஜாதகத்துல அடி வாங்கணும்னு எழுதி இருக்கு போல என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். உடனே சுந்தரவல்லி இதை கிளீன் பண்ண சொல்லு என்று சொன்ன சுரேகா வேலைக்காரியை கூப்பிட இதை நீ கிளீன் பண்ண வேணாம் போய் நந்தினி கூப்பிடு என்று அனுப்பி வைக்க அவரும் நந்தினியை கூட்டி வருகிறார்.

மாதவி நந்தினிவிடம் இதையெல்லாம் இப்பவே கிளீன் பண்ணு என்று சொல்லுகிறார். இந்த வீட்ல மூணு வேலைக்காரர்கள் கூட்டுரது, பெருக்கிறது எல்லாம் இவ கிட்ட கொடுத்துடு என்று சொல்லுகிறார். தாலி கட்டுனதுனால சூர்யா ஓட பொண்டாட்டி ஆளா ஆகிட முடியாது என்று சொல்லுகிறார் மாதவி. அந்த நேரம் பார்த்து சுந்தரவல்லிக்கு தெரிந்தவர்கள் கிப்ட்டுடன் வீட்டுக்கு வருகின்றனர். கல்யாணத்திற்கு வர முடியல அதனால வீட்டுக்கு கூட போகாம நேரா இங்க தான் வரேன. நீ பொண்ணு மாப்பிள்ளை கூப்பிடு நான் கிப்ட் கொடுத்துடுறேன் என்று சொல்ல சுந்தரவல்லி எதுவும் சொல்ல முடியாமல் இருக்கிறார். உடனே மாதவி சூர்யாவும் பொண்டாட்டியும் கோவிலுக்கு போய் இருக்காங்க வந்த உடனே உங்களுக்கு கூப்பிடுறேன் என்று சொல்லி சமாளிக்கிறார். அனைவரும் சொல்லி அவர்களை சமாளித்து வெளியே அனுப்பும் நேரத்தில் சூர்யா வந்து நிற்கிறார். சூர்யா அவர்களைப் பார்த்து ஆன்ட்டி எப்படி இருக்கீங்க ஹவ் ஆர் யூ என்று கட்டிப்பிடிக்கிறார். இதையெல்லாம் பார்த்த வேலை செய்பவர்கள் டுவிஸ்ட் மேல டுவிஸ்ட்டா போட்டுக்கிட்டு இருக்காங்களே என்று சொல்லுகின்றனர். சூர்யாவிடம் நீ கோயிலுக்கு போனதா சொன்னாங்க நீ மேல இருந்து வர என்று சொல்ல பரவாயில்லடா நீ உன் பொண்டாட்டிய கூப்பிடு நான் கிப்ட் கொடுத்துட்டு போயிடுவேன் என்று சொல்ல,உடனே சூர்யா என் பொண்டாட்டி என் பொண்டாட்டி அப்படி தானே உங்களுக்கு ஒரு குலு கொடுக்கிறேன் என் பொண்டாட்டி இங்க இந்த இடத்துல தான் இருக்கா கண்டுபிடிங்க பார்க்கலாம் என்று டாஸ்க் கொடுக்கிறார். அவர் எங்கெங்க இல்லையே நீயே சொல்லிடு என்று சொல்ல சரி நானே சொல்றேன் என்று நந்தினியை அனைத்து கூட்டி வந்து நிற்க வைத்து திஸ் இஸ் மை பொண்டாட்டி மை தங்க குட்டி என்று சொல்கிறார். உடனே உங்க வீட்டில வேலைக்காரங்களே இல்லையா மருமகளை வேலை வாங்கிக்கிட்டு இருக்க, எக்ஸ் மினிஸ்டர் பொண்ண இப்படி தான் வேலை வாங்குவியா என்று சொல்ல, அப்படியெல்லாம் இல்ல ஆன்ட்டி இன்னும் இவ யாருன்னு தெரிஞ்சா இன்னும் நீங்க ஷாக் ஆயிடுவீங்க என்று கேட்க இவ தான் எங்க தோட்டத்து வேலை செய்ற சிங்காரத்தோட பொண்ணு என்று சொல்ல,என்ன சுந்தரவல்லி இது என்று கேட்க நான் சொன்னா நம்ப மாட்டீங்களா உண்மைதான் என்று சொல்லிவிட்டு என்னோட கௌரவத்துக்காக நடந்த கல்யாணம் இது எல்லா புகழும் என் தாய்க்கு என்று சொல்லுகிறார். நந்தினி அழைத்து கிப்ட் வாங்குகிறார். பிறகு சுந்தரவல்லி நான் அப்புறம் எல்லாம் சொல்றேன் நீ கெளம்பு என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.

சூப்பர் மார்க்கெட்டில் இருந்து ஒருவர் வந்து 5மாப் ஸ்டிக்குகளை கொடுத்து சூர்யா என்கிற ஒருவர் கொடுக்க சொன்னார் என்று சொல்ல அதை மாதவியின் கணவரிடம் கொடுத்து இனிமே அவங்க ரூம அவங்க தான் கிளீன் பண்ணனும் அப்படி இல்லாம வேற யாராவது நந்தினி வேலை வாங்கினீங்க அவ்வளவுதான் சொல்லிட்டேன் என்று மிரட்டி விட்டு செல்லுகிரார்.

Moondru Mudichu Serial Today Episode Update
Moondru Mudichu Serial Today Episode Update

நீ பேசுனதெல்லாம் பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு சூர்யா ஆனா நீ உங்க அம்மாவ வெறுப்பேத்துறதுக்காக பேசுனியா இல்ல நந்தினி மேல இருக்குற பாசத்தினால பேசினியா என்று கேட்கிறார். உங்க அம்மா மேல இருக்கிற கோபத்துக்காக மட்டும் தான் இப்படி பண்ணிக்கிட்டு இருக்க, அவள் நிலைமையிலிருந்து கொஞ்சமாவது யோசிச்சு பாரு. திடீர்னு யாரோ ஒரு தாலி கட்டிட அந்த பொண்ணோட வாழ்க்கை என்ன ஆகும். அவ எதிர்பார்க்காத போது அவ கழுத்துல நீ தாலி கட்டினதால அவகிட்ட மன்னிப்பு கேட்டு இனிமே உன்ன நான் நல்லா பாத்துக்குறேன் என்று சொல்லி அவளுக்கு உன் மேல நம்பிக்கை வர அளவுக்கு நீ நடந்துக்கணும். நீங்க சொல்றது எனக்கு எதுவும் புரியல டாடி என்று சொல்லுகிறார். உன்னால நந்தினிக்கு எவ்வளவு வலியோ அவமானமோ இருக்கணும்னு நினைச்சு பாரு, அன்பா இருக்கிறவர்களை விட அன்பா இருக்குற மாதிரி நடிக்கிறாங்கன்னு தெரிஞ்சா அது மிகப் பெரிய வலி புரிஞ்சுக்கோ சூர்யா என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார்.

மாதவி, மாதவி கணவர் மற்றும் சுரேகா மூவரும் சூர்யா சொன்னதை நினைத்து கடுப்பாக உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனா சூர்யாவுக்கு நம்ம டார்கெட் கிடையாது அம்மா மட்டும்தான். அதனால நம்ப பாதிக்கப்படுவோம் என்று கூட அவன் யோசிக்க மாட்டான் என்று சொன்னால் ஒரு வேலை நம்ம நந்தினி கல்யாணம் பண்ணி வெச்சு தப்பு பண்ணிட்டோமோ என்று சுரேகா சொல்ல அதெல்லாம் ஒண்ணுமே கிடையாது சரிதான் என்று சொல்லுகிறார் மாதவி. மாதவியின் கணவர் சூர்யாவிற்கு நந்தினி மேல லவ்வெல்லாம் கிடையாது அவன் உங்க அம்மாவுக்காக நடிக்கிறான்.

ஆமா நடிக்கிறான் தான் ஆனா நிஜமாலுமே வந்துடுச்சுன்னா என்ன பண்றது என்று கேட்க ஆனா நீ நடக்க விட்ருவியா என்று அவர் சொல்லுகிறார். கண்டிப்பா அவளை இந்த வீட்ல வேலைக்காரியா மட்டும் தான் வச்சுக்கணும். வீட்டு வேலை எல்லாத்தையும் செய்ய வைக்கணும். சூர்யா முன்னாடி மட்டும் தான் நம்ம பாசமா இருக்கிற மாதிரி நடிக்கணும். மத்தபடி நம்மை யாருன்னு அவகிட்ட காட்டிகிட்டு இருக்கணும், அவள பாத்துக்கலாம் விடுக்கா என்று சுரேகா சொல்லுகிறார். நந்தினி சூர்யா ரூமில் சாமி படம் வைத்து விளக்கேற்றி சாமி கும்பிடுகிறார். அந்த நேரம் பார்த்து உள்ளே வந்த சூர்யா என் ரூம்ல சரக்கு ஸ்மால் தான வரும் இது என்ன ஸ்மல் என்று யோசிக்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்றைய ப்ரோமோவில் சூர்யா நந்தினியிடம் உனக்கொரு பிரச்சனைனா நான் வந்து நிற்பேன் என்று சொல்ல என் பிரச்சனையே நீங்கதான் என்று சூர்யாவிடம் சொல்லுகிறார். சூர்யா நந்தினி அழைத்து சென்று சுந்தரவல்லி முன் இன்று என் பிரண்டு விருந்துக்கு கூப்பிட்டு இருக்கான் என்று சொல்ல, வெளியே வந்ததும் வந்தேன் நான் உங்க பொண்டாட்டியா நடிச்சுக்கிட்டு இருக்கேன் என்று சூர்யாவிடம் சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Today Episode Update
Moondru Mudichu Serial Today Episode Update