அசிங்கப்படுத்தும் சூர்யா, அருணாச்சலம் சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா , அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லோகேஷன் அமைந்துள்ளது.

moondru mudichi serial promo update

moondru mudichi serial promo update

நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி மாதவியிடம் கோபத்துடன் நேத்து அவ இருக்கக் கூடாதுன்னு சொன்னேன்ல அவள் இன்னும் இங்க தான் இருக்காளா என்று மாதவியிடம் கேட்க அவர் எனக்கு எதுவும் தெரியாது மா என்று சொன்னவுடன் வேலைக்காரியிடம் சொல்லி அவளுடைய பேக்கை வெளியில் தூக்கி போட சொல்லுகிறார். நந்தினி மேலே இருந்து கீழே இறங்கி வருவதைப் பார்த்து சுந்தரவல்லி இவளை பார்த்தாலே எனக்கு எரிச்சலா இருக்கு நடுவீட்டில் ஏதோ கொண்டு வந்து நிறுத்தின மாதிரி இருக்கு அவள கழுத்தை புடிச்சு வெளியே தள்ளு என்று சுரேகாவிடம் சொல்ல நந்தினியை சுரேகா வெளியில இழுத்து சென்று தள்ளி விடுகிறார். அதனைப் பார்த்து சுந்தரவல்லி ரசித்துக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து சூர்யாவும் அருணாச்சலமும் வாக்கிங் சென்று விட்டு திரும்பவும் பேசிக்கொண்டு வருகின்றனர். நந்தினி கீழே விழுந்து கிடப்பதை பார்த்து சூர்யா அதிர்ச்சியாகி ஓடிவந்து நந்தினி தூக்கி விடுகிறார். சுந்தரவல்லி அருணாச்சலத்திடம் நைட்டு உங்ககிட்ட என்ன சொன்ன காலைல இங்க இருக்க கூடாதுன்னு தானே சொன்னேன் என்று சொல்ல அதுக்குன்னு இப்படி வெளியே தள்ளுவியா என்று கேட்க எனக்கு ஸ்டேட்டஸ் தான் முக்கியம் என்று சுந்தரவல்லி உறுதியாக இருக்கிறார். நந்தினி ஒரு நிமிஷம் கூட இந்த வீட்ல இருக்க கூடாது என்று சுந்தரவல்லி சொன்னவுடன் கல்யாணத்தை சூர்யா கூப்பிட்டு டவலை எடுத்துக் கொண்டு வர சொல்லுகிறார். சூர்யா நந்தினியை கிட்ட வர சொல்ல, இல்ல சார் நான் இங்கிருந்து போயிடுறேன் என்று சொல்ல கிட்ட வர சொல்லி டவலில் நந்தினி கையில் இருக்கும் மண்ணை துடைத்து விடுகிறார். இதையெல்லாம் பார்த்து சுந்தரவல்லி கடுப்பாகி நிற்கிறார்.

இதையெல்லாம் பார்த்து மாதவி சுரேகா மற்றும் மாதவியின் கணவர் என பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றனர். சூர்யா நந்தினி இடம் நீ என்னோட பொண்டாட்டி உன்னை இந்த வீட்டை விட்டு போக சொல்ற உரிமை யாருக்கும் கிடையாது. அப்படி யாராச்சும் உன்கிட்ட சொன்னா உன் ஹஸ்பண்ட் கிட்ட பேசணும்னு சொல்லு, இவங்க யார் வந்து என்கிட்ட பேசுறாங்கன்னு நான் பாக்குறேன். தெளிவா இன்னொரு வாட்டி சொல்ற எல்லாரும் கேட்டுக்கோங்க இவ என்னோட பொண்டாட்டி என்று சூர்யா நந்தினி அணைத்து இவ என் வீட்ல இங்கதான் இருப்பா. இவ இங்க இருக்குறது உங்களுக்கு விருப்பம் இல்லன்னா நீங்க வெளியே போங்க ஆள் இல்லாத டைம்ல அவளை இப்படி அசிங்கப்படுத்துறதெல்லாம் சின்ன புள்ளத்தனமா இல்லையா என்று சொல்லிவிட்டு நந்தினியை உள்ளே அழைத்துச் செல்கிறார். இனிமே உன்னை யார் வெளிய அனுப்புறாங்கன்னு நானும் பாக்குறேன் என்று கூட்டிச் செல்கிறார்.

அருணாச்சலத்திடம் சுந்தரவல்லி அவ நேத்தே வீட்டை விட்டு போறேன்னு சொன்னா ஆனா அவளை இருக்க சொல்லி யாரோ வற்புறுத்தி தைரியம் சொல்லி இருக்காங்க அது யாரு நீங்கதான என்று கேட்கிறார். நிதானமா இரு சுந்தரவல்லி என்று கேட்க, அதுதான் பண்ண வேண்டியதெல்லாம் கரெக்டா பிளான் பண்ணி பண்ணிட்டீங்களே அப்புறம் என்ன அதுதானே உண்மை என்று சுந்தரவல்லி அருணாச்சலத்திடம் வாக்குவாதம் செய்கிறார். அந்தப் பொண்ண பார்த்தாலே எனக்கு கம்பளிப்பூச்சி ஊறுற மாதிரி இருக்கு அவல போய் மருமகளா கூட்டிட்டு வந்து வச்சுக்கிட்டு என்று சொல்ல, அவளை ஏத்துக்க மனசு கஷ்டமா இருந்தாலும் அதுதான் உண்மை என்று அருணாச்சலம் சொல்லுகிறார். உடனே மாதவி சூர்யா இருக்கிற வரைக்கும் நந்தினியை யாராலும் துரத்த முடியாது நானும் துரத்த விட மாட்டேன் என்று சொல்லி மூவரும் உள்ளே சென்று விடுகின்றன.

கல்யாணம் காய்கறி வாங்க போக சூர்யா அவரை மேலே கூப்பிடுகிறார். என்னோட ரூம்ல லாண்டரிக்கு போடுற துணி எல்லாம் இருக்கு எடுத்துட்டு போய் போட்டுவிடு என்று சொல்ல முன்னாடி நீங்க மட்டும் இருந்தீங்க ஆனா இப்ப நந்தினி இருக்கு என்று தயங்க எதுக்கு நம்ம ரூம் போக தயக்கம் எடுத்துக்க போ என்று அனுப்பி வைக்கிறார். நந்தினி ரூமுக்கு வந்து கல்யாணம் அய்யாவோட அழுக்குத் துணி எல்லாம் இருக்கு துவைக்க எடுத்து குடுங்க என்று சொல்ல நந்தினியும் எடுத்து கொடுத்த சுந்தரவல்லி இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார். உடனே சுரேகா துணிய துவைக்கிறவர் துணி துவைத்து எடுத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிற பாத்தியா அக்கா என்று மாதவியிடம் சொல்லுகிறார். சுந்தரவல்லி கோபமாக கீழே இறங்கி வந்து உட்கார மாதவி ஆறுதல் சொல்லுகிறார். அந்த நேரம் பார்த்து நந்தினி துடப்பத்தை எடுத்து பெருக்கிக் கொண்டிருக்க அவள பாத்தாலே எனக்கு ஏறியது அவளை கண்ணு முன்னாடி இருக்க வேணாம்னு சொல்லு என்று சொல்ல இப்போ அவளை என்ன பண்ற பாரு என்று சுரேகா கோபமாக கிளம்பி வருகிறார்.

சுரேகா கோபமாக நந்தினியின் கிட்ட வர சரியான நேரத்தில் பார்த்து சூர்யா வர அதிர்ச்சியாகி சுரேகா நிற்கிறார். என்ன என்று கேட்க காபி குடிக்க வந்தேன் என்று சொல்லி சமாளிக்கிறார். நந்தினி நான் காபி போடவா என்று கேட்க அது அவ போட்டுக்கிறேன்னு சொல்றால்ல விடு என்று சூர்யா சொல்லிவிடுகிறார். சுந்தரவல்லி கோபமாக இருப்பதை பார்த்து உடனே காதில் போனை வைத்த சூர்யா நந்தினியை பெருமையாக பேசுகிறார். திமிரு புடிச்ச ஆளுங்க இருக்குற இடத்துல தங்கமான பொண்ணு என்று எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு பயங்கரமா புடிச்சிருக்கு என்று பேச சுந்தரவல்லி கடுப்பாகி ரூமில் சென்று கதவை சாத்துகிறார். சுந்தரவல்லி இடம் மாதவியும் சுரேகாவும் இந்த நேரத்துல தான் நீங்க பொறுமையா இருக்கணும். சுரேகா அந்த நந்தினி ஏதாவது பண்ணனுமா என்று சொல்லுகிறார். சூர்யா இருக்கிற வரைக்கும் அவள ஒன்னும் பண்ண முடியாது அதுக்காக அப்படியே விட்டு சொல்கிறாயா என்று சுந்தரவல்லி கேட்க அவளுக்கு கொடுக்குற டார்ச்சர் இல்ல அவளே தானா இந்த வீட்டை விட்டு வெளியே போகணும் அதை நான் பண்றேன் நீங்க டென்ஷன் ஆகாதீங்க என்று சொல்லிவிடுகிறார்.

பிறகு சூர்யா ரூமில் சிகரெட் பிடித்துக் கொண்டிருக்க நந்தினி நின்று கொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து எதுக்கு இப்படியே நின்னுகிட்டு இருக்க சாப்பிட வேண்டியதுதானே என்று சொல்ல அந்த நேரம் பார்த்து கல்யாணம் காபி எடுத்துக் கொண்டு வருகிறார். சூர்யா எனக்கு வேணாம் ரோகினிக்கு கொடு என்று சொல்லிவிடுகிறார். நந்தினி இடம் வந்த கல்யாணம் முன்னாடி உன்னை நந்தினி என்று கூப்பிட்டு இருந்தேன் ஆனா இப்படி இப்போ சின்னவரு உன் கழுத்துல தாலி கட்டிட்டாரு இப்போ நந்தினி அம்மான்னு கூப்பிடுறதா இல்ல நந்தினி என்று கூப்பிடறதா தெரியலமா என்று சொல்ல என்ன இப்படி பேசுறீங்க எப்பவுமே நான் வேலைக்காரி தான் நீங்க நந்தினி கூப்பிடுங்க என்று சொல்லுகிறார்.

கல்யாணம் நந்தினி இடம் எனக்கு இத பத்தி சொல்லலாமா சொல்லக்கூடாதான்னு கூட தெரியாது மா ஆனா என் மனசுக்கு தோன்றத நான் சொல்றேன் இந்த வீட்டோட செவத்துக்கு கூட காது இருக்கு அதனால பொறுமையா சொல்றேன் இருப்பதிலேயே சின்னவர் பண்ண ரொம்ப நல்ல விஷயமா அது உன்ன மாதிரி ஒரு நல்ல பொண்ண கல்யாணம் பண்ணது தான் மா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ஆனா மீதி நான்கு பேர் என்ன பண்ணுவாங்கன்னு தான் பயமா இருக்கு நீ கொஞ்சம் சூதானமா இருந்துக்கோமா என்று சொல்லுகிறார். இது மட்டும் இல்லாமல் சின்னவரும் பெரிய ஐயாவும் ரொம்ப நல்லவங்க, சின்னவருக்கு குழந்தை மனசுமா என்ன குழந்தைங்க பால் குடிக்கும் இவரு சரக்கடிப்பாரு அவ்வளவுதான் என்று சொல்லிவிட்டு அவர் கிளம்புகிறார். அருணாச்சலத்துக்கு காபி கொடுக்க அவர் சூர்யா குடிச்சிட்டானா என்று கேட்க இல்லை என்று சொல்லுகிறார் நந்தினிக்கு கொடுத்துட்டியா என்று கேட்க நந்தினிக்கு கொடுத்துட்டேன் என்று சொல்ல கல்யாணத்தை அருணாச்சலம் அறைந்து விடுகிறார். நந்தினிய பேர் சொல்லி கூப்பிடக்கூடாது அவை இந்த வீட்டோட மருமக நந்தினி அம்மான்னு தான் சொல்லணும் என்று சொல்ல அவரும் சரிங்க ஐயா என்று சொல்லுகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்றைய ப்ரோமோவில் கல்யாணம் நந்தினி அம்மா என்று சொல்ல சுந்தரவல்லி கடுப்பாகி அவரை கன்னத்தில் அறைகிறார். நீ நந்தினி கேட்டா நல்லா பாத்துப்பேன்னு சொல்லி ப்ராமிஸ் பண்ணனும் என்று சூர்யாவிடம் அருணாச்சலம் சொல்லுகிறார்.

அந்த நேரம் பார்த்து சுந்தரவல்லி வீட்டிற்கு ஒரு கெஸ்ட் கிஃப்ட் உடன் வந்து நிற்கிறார். என்ன சுந்தரவல்லி உங்கள் வீட்டில் வேலைக்காரன் இல்லையா என்று கேட்டால் சூர்யா என் பொண்டாட்டி யாருன்னு தெரிஞ்சா நீங்க இன்னும் ஷாக்காயிடுவீங்க என்று சொல்லுகிறார். என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

moondru mudichi serial promo update

moondru mudichi serial promo update