
மூக்குத்தி அம்மன் 2 படத்தின் வில்லன் பிரபல முன்னணி நடிகரா? சூப்பர் தகவல் இதோ.!!
மூக்குத்தி அம்மன் 2 படத்தின் வில்லன் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்.ஜேவாக பயணத்தை தொடங்கி நடிகர் இயக்குனர் என பன்முகம் திறமை கொண்டவர் ஆர்.ஜே பாலாஜி. அவர் இயக்கி நடித்து இருந்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்தப் படத்தில் அம்மன் கெட்டபில் நயன்தாரா நடித்திருந்தார்.
இந்தப் படம் OTT யில் வெளியாகி இருந்தாலும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என அறிவிப்பை படக்குழு வெளியிட்டு இருந்தது ஆனால் ஆர்.ஜே பாலாஜிக்கு பதிலாக சுந்தர் சி மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கப் போவதாகவும் அறிவித்திருந்தது.
பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இந்த திரைப்படத்திலும் நயன்தாராவை அம்மனாக நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் வில்லனாக நடிக்க அருண் விஜய் இடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் சம்பளம் அதிகமாக கேட்பதாகவும் தகவல் வெளியாக்கி உள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
