Mohan Raja busy on Thani Oruvan 2 Script | KOllywood | Tamil Cinema | jayam Ravi | Arvind Swamy | Thani Oruvan | Latest Cinema News

Mohan Raja busy on Thani Oruvan 2 Script :

தனி ஒருவன் படத்தின் பார்ட் 2 வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தனது உதவியாளர்களுடன் அதற்கான திரைக்கதை பணிகளில் தான் ஈடுபட்டு வருவதாகவும் மோகன் ராஜா கூறியுள்ளார்.

அடங்க மறு படத்தின் வெற்றியை அடுத்து ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார்.

இதைதொடர்ந்து ஜெயம் ரவி நடிக்கும் படம் என்னவென்பதை படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

வெறித்தனமாக ரெடியாகும் தளபதி 63 டைட்டில் – இந்த நானுல உங்க சாய்ஸ் எது?

ரோமியோ ஜூலியட், போகன் படங்களின் இயக்குநர் லக்‌ஷண் இயக்கத்தில்தான் ஜெயம் ரவி அடுத்ததாக ஒரு படத்தில் நடிக்கிறாராம்.

இது ஜெயம் ரவியின் 25-வது படம் என்றும் படக்குழு கூறியுள்ளனர். முன்னதாக தனி ஒருவன் 2 தான் ரவியின் 25-வது படம் என்று சொல்லி வந்தனர்.

தற்போது திடீரென அதற்கு பதிலாக இந்த படத்தை 25-வது படம் என்று சொல்லியிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் தனி ஒருவன் 2 டிராப்பாகி விட்டதா என்ற கேள்வியையும் எழுப்பியது.

ஆனால் இதை பொய்யாக்கும் விதமாக மோகன் ராஜா தற்போது ஓர் டிவீட் தட்டியுள்ளார்.

அதில் தனி ஒருவன் படத்தின் பார்ட் 2 வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தனது உதவியாளர்களுடன் அதற்கான திரைக்கதை பணிகளில் தான் ஈடுபட்டு வருவதாகவும் மோகன் ராஜா கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.