Mohan G Ready to Join With STR
Mohan G Ready to Join With STR

சிம்புவை இயக்க நான் ரெடி என திரௌபதி படத்தின் இயக்குனர் கூறியுள்ளார்.

Mohan G Ready to Join With STR : தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை என்ற படத்தின் மூலமாக இயக்குனரானவர் மோகன் ஜி. இந்தப் படத்திற்குப் பிறகு இவர் திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார்.

ட்ரெய்லரில் இடம் பெற்றிருந்த ஜாதிகள் உள்ளதடி பாப்பா என்ற ஒத்த வரியால் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளாகி இப்படம் வெற்றியடந்தது. குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் 18 நாளில் ரூபாய் 18 கோடி வசூல் செய்ததாக படக்குழுவினர் கூறியிருந்தனர்.

ஹரி, வெற்றிமாறன் படத்தை தொடர்ந்து முதல் முறையாக புது வேடத்தில் நடிக்கும் சூர்யா, இந்த படத்தை இயக்க போவது யார்? – லேட்டஸ்ட் தகவல்.!

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இயக்குனர் மோகனிடம் ரசிகர் ஒருவர் சிம்புவுடன் இணைந்து படம் பண்ணுவீங்களா என கேட்டுள்ளார்.

அதற்கு மோகன்ஜி சிம்பு ரெடி என்றால் நான் ரெடி தான் ப்ரோ என பதிலளித்துள்ளார்.

மேலும் தன்னுடைய அந்தப் பதிவில் அடுத்த படம் திரௌபதி படத்தின் ஹீரோ ரிச்சர்ட் உடன் தான். அந்த படத்திற்கு பிறகு தான் சிம்புவுடன் இணையத் தயார் என கூறியுள்ளார்.