MK Stalin speech
MK Stalin speech

MK Stalin speech – சென்னை: கொடநாடு எஸ்டேட் கொலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் முக்கிய குற்றவாளி என்று திமுக தலைவர் ஸ்டாலின் தன் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

கொடநாடு எஸ்டேட் கொலை விவகாரம் தற்போது பெரிய பரபரப்பை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகள், செய்திகள் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற மர்மக் கொலைகளின் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது குறித்து 2 தினங்களுக்கு முன் தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் சில முக்கிய ஆவணங்களையும், ஆவணபடங்களையும் வெளியிட்டார்.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அளித்துள்ள பேட்டியில், ‘கொடநாடு பங்களா எப்போதும் மர்மம் நிறைந்ததாகவே இருந்துள்ளது,

ஜெயலலிதா இருந்த போதும் சரி, அவர் இறந்த போதும் சரி, அந்த பங்களாவில் பல பிரச்சனைகள் இருந்து வந்தது.

மேலும் அங்கு இதுவரை பலர் மர்மமாக இறந்துள்ளனர். ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர், பங்களா காவலாளி, சிசிடிவி ஆப்ரேட்டர் என்று எல்லா மரணங்களும் மர்ம மரணங்கள் ஆகவே இருந்துள்ளது! தற்போது இந்த மர்ம மரணங்களுக்கு ஆதாரம் வெளியாகி உள்ளது.,

பல உண்மைகள் தற்போது வெளியே வர போகிறது. எடப்பாடி பழனிசாமி சொல்லித்தான் இந்த கொலையை செய்ததாக(?!) இதில் குற்றவாளியாக இருப்பவர்கள் கூறுகின்றனர்.

மேலும் கனகராஜ் மற்றும் சயனை தனக்கு தெரியாது என்று முதல்வர் இதுவரை குற்றத்தை மறுக்கவில்லை.

இதனால் இந்த மர்ம மரணத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் முழுக்குற்றவாளி எனத் தெரிகிறது என்று கூறினார்.

மேலும் அவரை உடனே ஆளுநர் விசாரிக்க வேண்டும். கொலை புகாரை நிரூபித்தால், முதல்வர் பழனிசாமி பதவி விலக தயாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த சம்பவத்தால் தற்போது தமிழகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here