Minister Sengottaiyan About 12th Result
Minister Sengottaiyan About 12th Result

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு ரிசல்ட் எப்போது என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர் செங்கோட்டையன்.

Minister Sengottaiyan About 12th Result : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவின் அதி தீவிரமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டது எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்தியாவின் ஒட்டுமொத்த பாதிப்பு 4 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா அதிவேகத்தில் முன்னேற்றத்தை அடைகிறது.

இதனால் பல இடங்களில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டு அனைவரும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்றா வெடிய.. செமஸ்டர் தேர்வுகள் ரத்து, ஆனால்? வெளியான அதிரடி அறிவிப்பு!

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏற்கனவே நடந்து முடிந்துவிட்ட நிலையில் சில தேர்வுகளை மட்டும் எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு மட்டும் மறு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வரும் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மேலும் பாடத்திட்டத்தை குறைக்கும் பணிகள் நடந்து வருவதாகவும், முதல் பருவத்தை ரத்து செய்வது குறித்தும், தனியார் பள்ளி கட்டணங்கள் குறித்தும் முதல்வருடன் ஆலோசனை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.