தமிழகத்தில் பல்கலைக் கழக தேர்வுகள் ரத்து செய்ய உள்ளதாக வெளியான தகவலுக்கு அமைச்சர் அன்பழகன் பதிலளித்துள்ளார்.
Minister Anbazhagan About Semester Exam : சீனாவில் கடந்த வருடம் உருவான கொரானா வைரஸ் தற்போது இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.
இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.5 லட்சத்தை தாண்டி மூன்று லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
அஜித், விஜய், ரஜினி ஆகியோர் மட்டும் திரையுலகம் கிடையாது – ஆர்கே செல்வமணி பரபரப்பு பேச்சு
இதன் காரணமாக தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டு அனைவரும் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக தேர்வுகளும் ரத்து செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வைரலாகி கொண்டிருக்கின்றன.
இதுகுறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தற்போதைய சூழ்நிலையில் கல்லூரி தேர்வுகளை நடத்துவது சாத்தியமில்லாத ஒன்றாக உள்ளது.
இதன் காரணமாக தேர்வுகளை ரத்து செய்வது குறித்து முதல்வருடன் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 4-ன் தொகுப்பாளர் யார்?? எப்போது தொடங்குகிறது? வெளியான அறிவிப்பு!
எனவே இன்னும் சில தினங்களில் கல்லூரி தேர்வுகள் குறித்த அரசாங்கத்தின் முடிவு என்ன என்பது தெரிய வரும்.
தேர்வு ரத்து செய்யப்படுகிறதா அல்லது தள்ளி வைக்கப்படுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.