Bigg Boss 4 Anchor
Bigg Boss 4 Anchor

பிக் பாஸ் சீசன் 4 தொகுப்பாளர் யார்? எப்போது தொடங்குகிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Bigg Boss 4 Anchor : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ்.

இதுவரை இந்த நிகழ்ச்சி 3 சீசன் களை கடந்துள்ளது. முதல் சீசன் தமிழுக்கு மிகமிக புதியது என்பதால் மிகவும் ஆர்வமாக பார்க்கப்பட்டது.

பிக் பாஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு – புகைப்படத்துடன் இதோ.!

இதனை அடுத்து இரண்டாவது சீசன் முழுக்க முழுக்க கிளாமராக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

அதேபோல் மூன்றாவது சீசன் காதலை வைத்து காட்டியதால் இதற்கும் கலவையான விமர்சனங்களே கிடைத்து வந்தன. ஆனால் இரண்டாவது சீசனை விட ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த மூன்று சீசன்களை தொடர்ந்து தற்போது நான்காவது சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஹாய் ஆன்ட்டி என கூறிய ரசிகர் – ரித்விகா கொடுத்த சரியான பதிலடி!

சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதால் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொடங்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ஆனால் கொஞ்சம் தாமதம் ஏற்படும் எனவும் கூறப்படுகிறது.மேலும் இந்த சீசனையும் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களே தொகுத்து வழங்க இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.