meiyazhagan movie 3 days collection
meiyazhagan movie 3 days collection

மெய்யழகன் படத்தின் மூன்று நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் மெய்யழகன் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது.

இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்திலும் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இது மட்டும் இல்லாமல் ஸ்ரீ திவ்யா, ராஜ்கிரன், தேவதர்ஷினி, ஜெய்பிரகாஷ் ,போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இரண்டு நாட்களில் ஏழு கோடியை தாண்டிய நிலையில் வார இறுதி நாட்கள் என்பதால் மூன்றாவது நாளில் 15 கோடியை தாண்டி உள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது.