Meera Mitun Latest Press Release | Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News | Meera Mitun

Meera Mitun Latest Press Release :

மீராமிதுன் இவர் எட்டு தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் நடித்தவர். சென்னையை சேர்ந்த இவர் படிக்கும் காலத்தில் இருந்தே மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்டவர்.

படிப்பிற்கு பின் மாடலிங் துறையில் நுழைந்து மிஸ் சவுத் இந்தியா, மிஸ் தமிழ்நாடு உட்பட நான்கு அழகி பட்டங்களை வென்றவர்.

தற்போது மிஸ் தமிழ்நாடு திவா எனும் பெயரில் தமிழ்ப்பெண்களுக்கென பிரத்யேகமாக அழகி போட்டி நடத்த முற்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இப்போட்டியை நடத்தக்கூடாது என தனக்கு கொலைமிரட்டல்கள் வருவதாக கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார். பத்திரிக்கைகளிலும் அந்த செய்தி வெளியாகியிருந்தது. அதன் தற்போதைய நிலவரம் கேட்டு அவரைத் தொடர்பு கொண்டபோது …

நான் படிக்கும் காலத்தில் இருந்தே மாடலிங்கில் ஆர்வம் கொண்டிருந்தேன் இந்தத்துறை கார்பரேட்கள் கொடிகட்டி பறக்கும் துறை இதில பெண்கள் வளர்வது மிகவும் கடினம்.

தமிழ்ப்பெண்ணான நான் மிகவும் கஷ்டப்பட்டே பல சாதனைகள் செய்தேன். இதில் ஆர்வம் உள்ள தமிழ்ப்பெண்கள் அந்த துனபங்கள் படக்கூடாது எனும் நோக்கில் தான் மிஸ் தமிழ்நாடு திவா எனும் பெயரை முறையாக டிரேட்மார்க் செய்து தமிழ்ப்பெண்களுக்கென பிரத்யேகமான ஒரு போட்டியை நடத்த முற்பட்டேன்.

இந்த துறையின் ஜாம்பவான்கள், கார்பரேட் மேலும் என்னுடன் நட்பாக பழகியவர்களும் இப்போட்டியை நடத்தக் கூடாது என கடும் நெருக்கடி தந்தனர்.

முன்னர் என்னுடன் வேலை பார்த்தவரும் கொச்சி மாடலிங் துறையை சேர்ந்தவருமான அஜித் ரவி, ஜோ மைக்கேல் பிரவீன் ஆகிய இருவரிடமிருந்து தொடர்ந்து கொலைமிரட்டல்கள் வந்தது. அதனாலேயே நான் போலிஸீடம் முறையிட்டேன்.

என் வளர்ச்சி மீது ஆரம்ப காலத்தில் இருந்தே பெரும் அக்கறையுடன் செயல்பட்டு வரும் பத்திரிக்கை நண்பர்கள் இந்த செய்தியை உலகறியச்செய்து பெரும் ஆதரவை பெற்று தந்தனர்.

NGK படத்தால் நடிப்பை விட முடிவு செய்த சாய் பல்லவி, காரணம் செல்வராகவன் – நடந்தது என்ன தெரியுமா?

தமிழ்நாடு போலீஸ் மிகத் தூரிதமாக நடவடிக்கை எடுத்தனர். எனக்கு முழு பாதுகாப்பும் மற்றும் வரும் மூன்றாம் தேதி நடைபெற விருக்கும் மிஸ் தமிழ்நாடு திவா போட்டிக்கு முழுபாதுகாப்பு தருவதாக உறுதி அளித்துள்ளனர்.

இது எனக்கு மிகப்பெரும் பலத்தையும் நம்பிக்கையையும் அளித்துள்ளது. பத்திரிக்கைகளுக்கும், தமிழ்நாடு காவல்துறைக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இனி தமிழ்ப்பெண்கள் மாடலிங்கில் ஜெயித்துக்காட்டுவார்கள் அதற்காக நான் தொடர்ந்து போராடுவேன் எனத் தெரிவித்தார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.