
தனுஷ் பட வாய்ப்பு தவறவிட்டதாக சிறகடிக்க ஆசை மீனா தெரிவித்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார் கோமதி பிரியா.
விஜய் டிவியில் ஒளிபரப்பான வேலைக்காரன் சீரியல் மூலம் பிரபலமான இவர் அதைத் தொடர்ந்து இந்த சீரியலில் எதார்த்தமான நடிப்பை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறார்.

இப்படியான நிலையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் தனுஷ் பட வாய்ப்பை தவற விட்டதாக தெரிவித்துள்ளார்.
அதாவது வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்தில் அம்மு அபிராமி நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் தன்னைத்தான் அணுகினார்கள் என தெரிவித்துள்ள இவர் அப்போது வேறு சில சீரியல்களில் கமிட்டாகி இருந்த காரணத்தினால் நடிக்க முடியாமல் போனதாக கூறியுள்ளார்.
இதை அறிந்த ரசிகர்கள் சூப்பர் ஹிட் படமாச்சே, அதில் நடித்திருந்தால் உங்கள் லெவலே வேற என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
