Master Vs IPL Final
Master Vs IPL Final

விஜய்யின் மாஸ்டர் ரிலீஸ் அன்று ஐபிஎல் பைனல் நடைபெறலாம் என கூறப்பட்டு வருகிறது.

Master Vs IPL Final : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, சஞ்சீவ், ஸ்ரீநாத், மகேந்திரன், ரம்யா மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீசாக இருந்த நிலையில் பரவி வரும் கொரானா வைரஸ் காரணமாக தள்ளிப் போய் வருகிறது. மேலும் தியேட்டர் உரிமையாளர்கள் மீண்டும் பழையபடி பெரிய கூட்டத்தை கொண்டு வர விஜயின் படத்தால் மட்டுமே முடியும் என எதிர்பார்க்கின்றனர்.

இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் படக்குழுவினர் படத்தை தீபாவளி ரிலீசாக நவம்பர் 14ஆம் தேதி வெளியிடலாம் என திட்டமிட்டு வருகின்றனர். விஜய்க்கும் தீபாவளியில் படம் வெளியாவது நிச்சயம் நல்ல வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் ஒளிபரப்பாகும் சீரியல்கள் புது எபிசோடுகள்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட சன் மற்றும் ஜீ தமிழ் – இதோ பாருங்க!

இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள மேலும் ஒரு புதிய தகவல் என்னவென்றால் இதே குரானா வைரஸ் காரணமாக தள்ளிப் போயுள்ளது ஐபிஎல் போட்டி.

கோடை விடுமுறைகளில் நடைபெறும் இந்தப் போட்டி தற்போது செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது. அப்படி செப்டம்பர் மாதத்தில் தொடங்கினால் பைனல் தீபாவளியன்று அதாவது நவம்பர் 14ஆம் தேதி தான் நடைபெறும் எனவும் ஒரு கணிப்பு வெளியாகி உள்ளது.

அதிலும் தல தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் பைனல் சென்று விட்டால் நிச்சயம் தீபாவளி தளபதி விஜய் மற்றும் தல தோனி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் ஆக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.