Master Theatre Release Shocking Update

விஜய் ரசிகர்களுக்கு மாஸ்டர் திரைப்படம் மிகப் பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

Master Theatre Release Shocking Update : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, சஞ்சீவ், ஸ்ரீநாத், பிரேம், தீனா, மகேந்திரன், வர்ஷா பொல்லம்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம்.. தளபதி விஜயின் கோரிக்கையை நிராகரித்த அரசு - திரையரங்கு உரிமையாளர்கள் புலம்பல்.!!

இந்த படம் உலகம் முழுவதும் ஜனவரி 13ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதால் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்தால் மட்டுமே எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் என்பதால் தளபதி விஜய் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நேரில் சந்தித்து அனுமதி அளிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால் தற்போது கொரானா வைரஸ் புதிய உருவம் மாற்றத்துடன் பரவத் தொடங்கி இருப்பதால் மக்களின் பாதுகாப்பு கருதி 100% இருக்கைக்கு அனுமதி அளிக்க முடியாது என தமிழக அரசின் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் விஜய் ரசிகர்கள் மற்றும் மாஸ்டர் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி உள்ள நிலையில் மாஸ்டர் திரைப்படம் மாஸ் காட்டுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.