Master Release Issue on Pongal

பொங்கல் அன்று மாஸ்டர் திரைப்படம் வெளியாக இருந்தது. இதனால் உற்சாகத்தில் இருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Master Release Issue on Pongal : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் திரைப்படம் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் உலகம் முழுவதும் 13 ஆம் தேதி வெளியாக உள்ளது.

மேலும் விஜய்யின் கோரிக்கையை ஏற்று திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு உத்தரவு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் இது விதிமீறல் ஆன செயல் எனவும் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டும் தான் அனுமதி பிறப்பிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால் தமிழக அரசு 100 சதவீதம் இருக்கை உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இதனால் அடுத்த கட்ட நடவடிக்கையாக தமிழக அரசு என்ன செய்யும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒருவேளை 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி என மறுஉத்தரவு வெளியானால் பொங்கலுக்கு வெளியாக இருந்த மாஸ்டர் திரைப்படம் வெளியாகாது என தகவல் வந்துள்ளது.

இது தளபதி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.