மாஸ்டர் படத்தில் இருந்து மாஸ் பைட் சீன் வீடியோ ஒன்று இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் இருந்து ஷூட்டிங் வீடியோக்களும் போட்டோக்களும் இணையத்தில் லீக்காகி வருவது வழக்கமாகி விட்டது.
இந்நிலையில் தற்போது விஜயின் பைட் சீன் வீடியோ ஒன்று சமூக வளையதளங்களில் மாஸ்டர் படத்தின் சண்டை காட்சி என்ற பெயரில் வைரலாகி வருகிறது.
ஆனால் உண்மையாவே இது மாஸ்டர் பட காட்சியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. விஜயின் முகம் சரிவர தெரியவில்லை என்பதே இதற்கு காரணம்.
இருப்பினும் விஐய் ரசிகர்கள் யார் வீடியோவை ஷேர் பண்ணாதீங்க டா. அப்படியே உங்களுக்கு வீடியோ வந்தாலும் பார்த்துட்டு டெலீட் பண்ணிடுங்க என கோரிக்கை வைத்து வருகின்றனர்.