மார்க் ஆண்டனி திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த புரோமோ வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக விளங்கி வரும் நடிகர் விஷால் லத்தி திரைப்படத்தை தொடர்ந்து திரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கி பிரபலமான இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் “மார்க் ஆண்டனி” திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக நடிகை ரித்து வருமா நடிக்க எஸ் ஜே சூர்யா, சுனில், செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். டைம் டிராவலை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.

அண்மையில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்ததை தொடர்ந்து மார்க் ஆண்டனி திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்திக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாக இருப்பதாக படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான “அதிருதா… நெஞ்சம் அதிரனும் மாமே” என்ற பாடலின் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது . அப்பாடலை டி.ஆர்.ராஜேந்திரன் அவரது பாணியில் இணையதளமே அதிரும் அளவிற்கு பாடி அசத்தியுள்ளார். தற்போது இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்து பயங்கரமாக வைரலாகி வருகிறது.