விஜயை விட அதிகமான சம்பளம் வாங்கியதாக பேசியுள்ளார் மன்சூர் அலிகான்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக லியோ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கிய இந்த படத்தில் எக்கச்சக்கமான திரையிட பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். அவர்களில் ஒருவர் தான் மன்சூர் அலிகான்.

இந்த நிலையில் தற்போது இவர் அளித்த பேட்டி ஒன்றில் விஜய்யும் நானும் இணைந்து நடித்த படத்தில் அவரை விட அதிக சம்பளம் வாங்கியதாக தெரிவித்துள்ளார்.

அதாவது இவர்கள் 1996 ஆம் ஆண்டு வெளியான வசந்த வாசல் படத்தில் இணைந்து நடித்தனர். இந்த படத்தில் விஜய் இரண்டு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்க அவருக்கு வில்லனாக நடித்த மன்சூர் அலிகான் நாலு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கியதாக தெரிவித்துள்ளார்.

மன்சூர் அலிகான் இவ்வாறு பேசிய தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.