திடீரென ஜீ தமிழ் சீரியலில் இருந்து விலகி உள்ளார் மனிஷா அஜித்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று கன்னத்தில் முத்தமிட்டால். நூறாவது நாள் எபிசோடு தாண்டி ஆதிரா மதிமாறன் திருமணத்தை நோக்கி இந்த சீரியல் நகர்ந்து வருகிறது.

திடீரென ஜீ தமிழ் கன்னத்தில் முத்தமிட்டால் சீரியலில் இருந்து விலகிய மனிஷா அஜித்.. காரணம் என்ன??

இந்த நிலையில் சீரியலில் இருந்து மனிஷா அஜித் வெளியேறி உள்ளார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்த நிலையில் சீரியல் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். இந்த சீரியலில் இருந்து நானாக விலகவில்லை. அவர்கள் தான் நீங்கள் சீரியல் இருந்து விலகிக் கொள்ளுங்கள் நாங்கள் வேறு ஆளை பார்த்து விட்டோம் என நூறாவது நாள் எபிசோட் கொண்டாடத்தை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததும் மெயில் அனுப்புகிறார்கள்.

திடீரென ஜீ தமிழ் கன்னத்தில் முத்தமிட்டால் சீரியலில் இருந்து விலகிய மனிஷா அஜித்.. காரணம் என்ன??

சூட்டிங் ஸ்பாட்டில் பாதுகாப்பு இல்லை கடுமையான காய்ச்சல் இருந்தும் நான் நடித்து வந்தேன். இதுவரை எனக்கு ஆறு லட்சம் ரூபாய் வரை சம்பள பாக்கி உள்ளது. அப்படி இருந்தும் நான் எந்த ஒரு பிரச்சனையும் செய்யாமல் நடித்து வந்த நிலையில் என்னை சீரியலில் இருந்து விலக்கி விட்டார்கள் என விளக்கம் அளித்துள்ளார்.

இது ஒரு புறம் இருக்க மனிஷா அஜித் விலகளால் இது கன்னத்தில் முத்தமிட்டால் சீரியலில் நாயகியாக நடிக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.