Web Ads

மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி..

இயக்குநர் மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வெளியான ‘தக் லைஃப்’ படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, நாசர், ஜோஜு ஜார்ஜ் என பலர் நடித்தனர்.

‘கேங்ஸ்டர்’ கதைக்களத்தில் உருவான இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார். பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் ரசிகர்களை கவராமல் போனது.

இதையடுத்து, மணிரத்னம் காதல் கதை ஒன்றை இயக்கப் போவதாகச் செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் அவர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இருவரும் இதற்கு முன் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் இணைந்திருந்தனர். இப்போது இணையும் படத்தில் ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே சிறுத்தை சிவா இயக்கத்திலும் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் அப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

maniratnam to direct vijay sethupathi
maniratnam to direct vijay sethupathi