Fahad Fazil's exceptional performance in the Tamil film Maamannan has taken social media by storm

மாமன்னன் படத்தை தொடர்ந்து ஜாதி படத்துக்காக இயக்குனர் ஒருவர் பஹத் பாசிலை அணுக பதிலடி கொடுத்து அனுப்பியுள்ளார்.

தமிழ் சினிமாவில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் மாமன்னன். இந்தப் படத்தில் வில்லனாக ரத்தினவேலு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் பகத் பாசில்.

OTT ரிலீசுக்கு பிறகு பஹத் பாஹில் கதாபாத்திரம் பெரிதும் கொண்டாடப்பட்டது. இதைத்தொடர்ந்து பிரபல இயக்குனர்களின் ஒருவரான மோகன்ஜி ஜாதி தொடர்பான ஒரு படத்தை இயக்குவதற்காக பஹத் பாஹிலை அணுகியுள்ளார்.

மேலும் அந்தப் படத்தில் இவரது பெயர் ரத்னவேலுவாகவே இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். ஆனால் வேண்டவே வேண்டாம் என்று பகத் பாஹில் மறுப்பு தெரிவித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

அதன் பின்னரே இவர் முகநூல் பக்கத்தில் வைத்திருந்த ரத்தினவேலு கதாபாத்திரம் போட்டோவை நீக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்றாலும் இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.