ஜெயிலர் திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்க இருக்கும் பிரபல மலையாள சூப்பர் ஸ்டார் குறித்த அப்டேட் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக என்றென்றும் திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினியின் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் “ஜெயிலர்” திரைப்படம் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க ரஜினியுடன் இணைந்து பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் 75 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில் இப்படத்தில் பிரபல மலையாள சூப்பர் ஸ்டார் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக புதிய வைரல் தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதாவது ஜெயிலர் திரைப்படத்தில் மலையாளத்தில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் மோகன்லால் அவர்கள் இப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாகவும் இதற்கான படப்பிடிப்பு ஜனவரி 8 மற்றும் 9ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி ரசிகர்களின் இடையே வைரலாகி வருகிறது. இது தொடர்பான அதிகாரவபூர்வமான அறிவிப்பை படக்குழு விரைவில் அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.