சினிமாவில் ஆண் பெண் வேறுபாடு பார்க்கப்படுகிறது : மாளவிகா மோகனின் ஆதங்கம்..!

Web Ads

சினிமாவில் ஆண் பெண் வேறுபாடு பார்க்கப்படுவதாக மாளவிகா மோகனன் ஆதங்கமாக பேசி உள்ளார்.

malavika mohanan latest speech viral

malavika mohanan latest speech viral

தமிழ் சினிமாவில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். சியான் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது கார்த்திக்கிற்கு ஜோடியாக சர்தார்2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் சினிமா குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார் மாளவிகா மோகனன். அதாவது சினிமாவில் ஆண் பெண் வேறுபாடு பார்க்கப்படுகிறது நடிகர்கள் என்றால் ஒரு மரியாதையும் நடிகைகள் என்றால் ஒரு மரியாதை கிடைக்கிறது மரியாதையையும் தாண்டி சம்பளத்திலும் பாகுபாட்டை ஏற்படுத்துகிறார்கள் நடிகர்களுக்கு அள்ளித் தருகிறார்கள் நடிகைகளுக்கு கிள்ளி தருகிறார்கள் இந்தப் போக்கு மாற வேண்டும் என்று கூறியுள்ளார்.

சினிமாவில் சில நடிகர்கள் பெண்களை மதிப்பவர்களைப் போல தங்களை காட்டிக்கொண்டு அந்த முகமூடியை சரியான நேரத்தில் அணிந்து கொண்டு நல்ல பேரை வாங்கிக் கொள்கின்றனர் ஆனால் கேமராவுக்கு பின்னால் அவர்கள் எப்படி எல்லாம் மாறுவார்கள் என்பதை கண்கூடாக பார்த்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

malavika mohanan latest speech viral

malavika mohanan latest speech viral