Mahima Nambiar in controversial Role | Asura Guru Asura Guru is an upcoming Indian Tamil intense action crime thriller film | Vikram Prabhu | Rajdeep Singh

Mahima Nambiar in controversial Role :

தமிழ் சினிமாவில் சாட்டை படத்தின் மூலம் அறிமுகமானவர் மஹிமா நம்பியார்.

மென்மையான தோற்றம் சாந்தமான நடிப்பு என முதல் படத்திலேயே யாருடா இந்த பொண்ணு என எல்லோரையும் கேட்க வைத்தவர் அதே வேகத்தில் குற்றம் 23, கொடிவீரன் படங்களில் நடித்து முன்னணி அந்தஸ்தை அடைந்தார்.

ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக இவர் நடித்துள்ள ஐங்கரன் படம் கூடிய விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் தற்போது விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கும் அசுரகுரு படத்தில் அவருக்கு ஜோடியாகவும் மஹிமா நம்பியார் நடித்து வருகிறார். இந்த படத்தை A. ராஜ்தீப் இயக்க JSB சதிஷ் தயாரிக்கிறார்.

வெற்றிமாறனுக்காக தனுஷ் போட்ட மாஸ்டர் பிளான் – ஸ்பெஷல் அசுரன் அப்டேட்!

இதுவரை குடும்ப பாங்கான பெண்ணாக மென்மையான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த மஹிமா, இப்படத்தில் முதல்முறையாக முற்றிலும் மாறுபட்ட ஒரு வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்துக்காக மஹிமா நம்பியார் நடிப்பு பயிற்சி, சண்டைப் பயிற்சி ஆகியவை மேற்கொள்வது போன்ற வீடியோ ஒன்றையும் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளனர். இதில் மஹிமா நம்பியார் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகளும் இடம்பெற்று அதிர வைக்கின்றன.

இதுபோன்ற சர்ச்சைக்குரிய காட்சிகள் தற்போது ரசிகர்களிடையே வரவேற்பை பெறுவதோடு பாக்ஸ் ஆபீஸிலும் அந்த படங்கள் வெற்றிபெறுவதால் அந்த வரிசையில் அசுரகுரு படமும் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படம் மஹிமா நம்பியாருக்கு மேலும் பெயர் வாங்கி தரும் எனவும் கூறப்படுகிறது.

மேலும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல்கள்

AsuraGuru Crew

YouTube video

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.