Mahabharatham Music Secrets
Mahabharatham Music Secrets

தமிழ் மகாபாரதத்தின் பாடலாசிரியர் பாடகர் மற்றும் மியூசிக் டைரக்டர் யார் என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.

Mahabharatham Music Secrets : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாபாரத சீரியல் பட்டி தொட்டி எங்கும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அந்த அளவிற்கு இந்த சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

பல வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பான இந்த மெகா தொடர் தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக புதிய சீரியல் எபிசோடுகள் இல்லாததால் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

மறு ஒளிபரப்புக்கும் கொஞ்சமும் பஞ்சம் இல்லாத வரவேற்பு கிடைத்துள்ளது. தொடர்ந்து இந்த சீரியல் பற்றிய தகவல்களை நாம் பார்த்து வருகிறோம்.

இஅந்த வகையில் இன்று இந்த சீரியலின் பாடலாசிரியர், பாடகர் மற்றும் இசையமைப்பாளர் யார் என்பதை பார்க்கலாம் வாங்க.

ஏற்கனவே இந்தியில் ஒளிபரப்பான இந்த மகாபாரத சீரியல் தமிழில் டப் செய்யப்பட்டு தான் ஒளிபரப்பாகி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.

எதிர்பார்த்து ஏமாறும் விஜய் ரசிகர்கள்.. தள்ளி போகிறதா மாஸ்டர் ரிலீஸ்? – ஷாக்கிங் அப்டேட்.!

இந்தியை விட தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று கூட சொல்லலாம். அதற்கு காரணம் மெகா தொடரின் பாடல் வரிகள், இசை, நடிகர்களின் குரல், நடிப்பு என ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டே செல்லலாம்.

இந்த மெகா தொடர்ந்தும் இடம்பெற்று வந்த இந்திப் பாடலை தமிழ் பாடலாக மொழிபெயர்த்து கொடுத்தவர் டாக்டர் ருக்மணி ரமணி. இவர் கலைமாமணி விருது போன்ற பல விருதுகளை வாங்கியுள்ளார்.

சரி இந்த சீரியலில் இடம்பெறும் பாடல்களைப் பாடியவர் யார் என்பதை பாடலாம் பாருங்க.

திரௌபதியின் தீம் மியூசிக் பாடல் (வானைத் தொட்டது வேள்வித்தீ) – பாடகி சின்னக்குயில் சித்ரா

விதியாளும் விளையாட்டில் சதி வலையில் (சோகம்) என்ற பாடலை எஸ் பி பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். இதன் இன்னொரு வெர்ஷனை எஸ் எம் சுரேந்தர் பாடியுள்ளார்.

அர்ஜுனன் மற்றும் கர்ணன் குறித்த ஒரு தாயின் புத்திரரே என்ற பாடலை ஜிவி பிரகாஷ் மற்றும் கார்த்திக் இணைந்து பாடியுள்ளனர்.

ஜகத்தினில் விதியை வென்றது யார் என்ற பாடலையும் எஸ் என் சுரேந்தர் பாடியுள்ளார்.

மாப்பிள்ளை கிடைச்சாச்சு.. வருங்கால கணவரை கட்டியணைத்து புகைப்படம் வெளியிட்ட ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் பட நடிகை!

இந்த தொடரில் இடம்பெறும் முரளி மனோகரா பாடல் உட்பட 75% தீம் பாடலை ரோகித் சாஸ்திரி என்பவர் தான் பாடியுள்ளார். வடமொழி வார்த்தைகள் அதிகம் இடம்பெறும் பாடல்கள் என்பதால் அனைத்து மொழிப் பாடல்களையும் பாடும் திறமை கொண்ட இவர் பாடியுள்ளார்.

அஜய் கோகாவலி, அதுல் கோகாவலி மற்றும் இஸ்மாயில் தர்பார் என மூவர் இணைந்து இசையமைத்துள்ளனர். இவர்கள் மராத்தி மற்றும் இந்தியில் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்துள்ளனர்.