மாஸ்டர் திரைப்படம் ஏப்ரலில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்த நிலையில் படம் தள்ளி போவதாக தகவல்கள் கசிந்துள்ளது.
Master Release Date Details : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். இப்பாத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.
மேலும் இப்படத்தை புனித வெள்ளி விருந்தாக ஏப்ரல் 9-ல் வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நிறைவடைய இன்னும் எப்படியும் 2 மாதங்கள் ஆகும் என்பதால் படத்தின் ரிலீஸ் ஏப்ரல் இறுதிக்கோ அல்லது மே மாதத்திற்கோ தள்ளி போகும் என கூறப்படுகிறது.
விஜய் மகனுக்கு கதை ரெடி.. விஜயை வைத்து மாஸ் காட்டிய இயக்குனர் அதிரடி – அப்போ செம ஹிட் இருக்கு??
இதனால் தளபதி ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர், மேலும் படம் தள்ளி போவது மட்டும் உறுதியானால் விஜய் விட்ட தேதியில் ( ஏப்ரல் 9 ) சூர்யாவின் சூரரை போற்று படம் ரிலீசாகும் எனவும் கூறப்படுகிறது.