
அஜித், மகிழ் திருமேனியின் அடுத்த படம் குறித்த முக்கியமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக ஏகே 62 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருந்த இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் திடீரென விலக்க பட்டார்.

இதையடுத்து இந்த படத்தை யார் இயக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மகிழ் திருமேனி அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் வரும் பிப்ரவரி ஏழாம் தேதி இந்த படம் குறித்த முக்கியமான விஷயம் ஒன்று நடைபெற உள்ளது.

அதாவது இயக்குனர் மகிழ் திருமேனி நடிகர் அஜித்தை சந்தித்து AK 62 படத்தின் கதையை விளக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. அஜித் முழுமையான கதையை கேட்ட பின்னரே இவர்களது கூட்டணி அமையுமா அமையாதா என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.