மாவீரன் திரைப்படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் குறித்த அப்டேட் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக திகழும் நடிகர் சிவகார்த்திகேயன் மண்டேலா திரைப்பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் “மாவீரன்” திரைப்படத்தில் நடித்திருக்கிறார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிப்பில் பரத் சங்கர் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்க வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடித்திருக்கிறார்.

மேலும் பல முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படம் வரும் ஜூலை 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடியாக வெளியாக இருப்பதை படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. தற்போது படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு இறுதி கட்டப் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில் முதல் பாடலின் வரவேற்பை தொடர்ந்து படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலாக சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி சங்கர் இணைந்து பாடிய வண்ணாரப்பேட்டையில் என்னும் பாடல் கடந்த 14ஆம் தேதி வெளியானது.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இணையதளத்தில் பட்டையை கிளப்பி வரும் பாடல் வெளியான 24 மணி நேரத்தில் 5 மில்லியனுக்கும் மேலாக பார்வையாளர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனை படக்குழு மகிழ்ச்சியுடன் கிளிம்ஸ் வீடியோவாக வெளியிட்டுள்ளது.