மாவீரன் திரைப்படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலுக்கான அப்டேட்டை படக்குழு ப்ரோமோவுடன் வெளியிட்டுள்ளது.

சின்னத்திரை மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி தற்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக இடம் பிடித்து மாஸ் காட்டி வரும் சிவகார்த்திகேயன் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாவீரன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் இப்படம் வரும் ஜூலை 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடியாக வெளியாக உள்ளது. இதற்காக ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள் மத்தியில் இப்படம் தொடர்பான தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வகையில் பரத் ஷங்கர் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் முதல் பாடலில் வரவேற்பை தொடர்ந்து தற்போது செகண்ட் சிங்கிள் பாடலுக்கான அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி சங்கர் இணைந்து பாடிய “வண்ணாரப்பேட்டையில்” என்னும் பாடல் வரும் ஜூன் 14ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு கலகலப்பான ப்ரோமோ வீடியோ உடன் வெளியிட்டுள்ளது. அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.