மாவீரன் திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாக உள்ளது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது மடோனஸ்வினி இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாவீரன் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அதிதி சங்கர் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் பல முன்னணி பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி இருக்கும் இப்படம் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக சமீபத்தில் படக்குழு புதிய போஸ்டருடன் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தில் புதிய அப்டேட் இன்று மாலை 5:30 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருப்பதால் இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்புடன் புதிய அப்டேட் தகவலுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.