இயக்குனர் மிஷ்கின் பகிர்ந்திருக்கும் மாவீரன் திரைப்படம் குறித்த சர்ப்ரைஸ் தகவல் வைரலாகி வருகிறது.

மண்டேலா திரைப்படத்தை இயக்கி தேசிய விருது பெற்று தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் மடோன் அஸ்வின். இவரது இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழில் ‘மாவீரன்’ என்றும் தெலுங்கில் ‘மாவீரடு’ என்ற தலைப்பில் உருவாகி இருக்கும் இப்படம் வரும் ஜூலை 14ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அண்மையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படம் தொடர்பான பல சுவாரசியமான விஷயங்களை அவ்வப்போது இயக்குனர் மிஷ்கின் பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இப்படம் தொடர்பாக பேசிய இயக்குனர் மிஷ்கின் அவர்கள் இப்படத்திற்கு பின்னணி குரல் கொடுக்க மாவீரன் படக்குழு கமல் மற்றும் ரஜினியை அணுகியதாகவும், ஆனால் அவர்கள் இருவரும் அவர்களது பட பணிகளில் பிசியாக இருப்பதால் இதில் இணைய முடியவில்லை என்று கூறியிருக்கிறார். மேலும் இப்படத்தில் அவர்களுக்கு பதிலாக வேறு ஒரு முக்கிய பிரபலம் குரல் கொடுத்திருப்பதாகவும் அது அனைவருக்கும் மிகவும் சர்ப்ரைசாக இருக்கும் எனவும் தெரிவித்திருக்கிறார். இவரது இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அந்தப் பிரபலம் யார்? என்ற எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்து வைரலாகி வருகிறது.