மாவீரன் படத்தின் இயக்குனரின் சுவாரசியமான பேட்டியின் தகவல் வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் முக்கிய திரைப்படங்களில் ஒன்று மாவீரன். சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் வரும் ஜூலை 14ஆம் தேதி தமிழில் மாவீரன் என்றும் தெலுங்கில் மாவீரடு என்ற தலைப்பில் ஒரே நேரத்தில் ரிலீசாகவுள்ளது.

இதில் கதாநாயகியாக நடிகை அதிதி சங்கர் நடிக்க இயக்குனர் மிஷ்கின் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இப்படத்தின் பிரமோஷன் பணிகளை படக்குழு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்திய பேட்டியில் இயக்குனர் மடோன் அஸ்வின் இப்படம் குறித்து பகிர்ந்திருக்கும் சுவாரசியமான தகவல்கள் தற்போது வைரலாகி வருகிறது.

அதில் அவர், தான் இந்த படத்திற்காக எந்த வித சமரசமும் செய்து கொள்ளவில்லை, தான் உருவாக்கிய கேரக்டரில் சிவகார்த்திகேயன் சிறப்பாக பொருந்தி இருக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்காக தான் எதையும் மாற்றவில்லை அதை அவரும் என்னிடம் கேட்கவில்லை. சிவகார்த்திகேயன் என்றாலே அப்படத்தில் நிறைய காமெடி இருக்கும் ஆனால் இதில் அவருக்கு காமெடியே கிடையாது.
அவரை சுற்றியுள்ளவர்கள் மட்டுமே காமெடி செய்வார்கள் என்று கூறியிருக்கிறார். மேலும் இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் சின்ன சின்ன ஆலோசனைகளை கூறியதாகவும் அது படத்திற்கு மிகவும் உதவியாக இருந்ததாகவும் கூறியிருக்கிறார்.