மாநாடு படம் குறித்து யுவன் சங்கர் ராஜா வெளியிட்ட அப்டேட் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

Maanadu 1st Single Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை வெங்கட் பிரபு இயக்க சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். படப்பிடிப்புகள் முற்றிலுமாக முடிந்து படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வீடியோ சமீபத்தில் வெளியாக இருந்த நிலையில் வெங்கட்பிரபுவின் தாயார் மரணம் அடைந்த காரணத்தினால் அது தள்ளிப் போனது.

விரைவில் காத்திருக்குது கொண்டாட்டம்.. மாநாடு குறித்து யுவன் ஷங்கர் ராஜாவை விட அப்டேட்

இந்த நிலையில் தற்போது யுவன் சங்கர் ராஜா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மாநாடு சிங்கிள் டிராக் விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளார். இதனால் சிம்பு ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். மாநாடு சிங்கிள் ட்ராக் வெளியாகும் நாளுக்காக காத்துக் கொண்டிருப்பதாக கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.