Maanaadu

Maanaadu Heroine : மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக யார் நடிக்க உள்ளார்கள் என்பது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு மீண்டும் பிஸியான நடிகராக அடுத்ததடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

சிம்பு, விக்ரமை தொடர்ந்து மணிரத்தினம் படத்தில் இணைந்த சூப்பர் ஸ்டார் – வெளியான அதிரடி தகவல்.!

சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவாக தான் வருவேன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க உள்ளார்.

சுரேஷ் காமாட்சி தயாரிக்க உள்ள இந்த படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.

இவைகளை தொடர்ந்து தற்போது இப்படத்தின் நாயகி யார் என்ற தகவலும் நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்துள்ளன.

சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அடங்கமறு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த ராசி கண்ணா தான் மாநாடு நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

வந்தா ராஜாவா தான் வருவேன் ரிலீஸ் – சிம்பு ரசிகர்களுக்கு சூப்பர் தகவல்.!

மேலும் இப்படத்தின் படத்தின் படப்பிடிப்புகள் பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது என்பது கூடுதல் தகவல்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.