மாமன்னன் படத்தின் போட்டோ ஷூட்டின் BTS வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக விளங்கும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான ‘மாமன்னன்’ திரைப்படம் நேற்றைய முன் தினம் திரையரங்குகளில் வெளியானது. ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாஸில் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இப்படம் தொடர்ந்து திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இப்படம் வெளியாவதற்கு முன்பு இப்படம் மீதுள்ள எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க செய்திருந்த இப்படத்தின் போஸ்டர்களின் BTS வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.