மாமன்னன் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

தமிழ் சினிமாவில் பிரத்தியேகமான கதைகளை இயக்கி தனக்கென தனி இடம் பிடித்து முன்னணி இயக்குனராக இடம் பிடித்திருப்பவர் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்களை தொடர்ந்து இவரது இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் கடந்த ஜூன் 29ஆம் தேதி “மாமன்னன்” திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாஸில் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்த இப்படம் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இப்படம் பிரபல ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாமன்னன் திரைப்படம் netflix தளத்தில் வரும் 27 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அந்நிறுவனம் போஸ்டருடன் அறிவித்துள்ளது. இந்த தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வைரலாகி வருகிறது.