கமல்ஹாசன் முன்னிலையில் தன்னுடைய நீண்ட நாள் காதலியை கரம்பிடிக்க உள்ளார் கவிஞர் சினேகன்.

Lyricist Snehan Marriage : தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி இருப்பவர் கவிஞர் சினேகன். இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் கூட போட்டியாளராக பங்கேற்றார்.

கமல்ஹாசன் முன்னிலையில் காதலியை கரம் பிடிக்கிறார் கவிஞர் சினேகன் - மணப்பெண்ணும் ஒரு நடிகை தான்.!!

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கூட ஒரு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது? 
 

இந்த நிலையில் கவிஞர் சினேகன் வரும் 29ஆம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் உலக நாயகன் கமல் ஹாஸன் முன்னிலையில் தன்னுடைய நீண்ட நாள் காதலியான கன்னிகா என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

கன்னிகா தமிழ் சினிமாவில் வெளியான தேவராட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நான் 4 இல்ல…40 திருமணம் கூட செய்துகொள்வேன்! – Actress Vanitha Vijayakumar அதிரடி பேட்டி