சமீபத்தில் வெளியான லவ் டுடே படம் சிறிய பட்ஜெட்டில் எடுத்து வசூலை அல்லியது ரசிகர்களையும் ஈர்த்து மாபெரும் வெற்றி அடைந்தது. இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ளார், ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்தது .

சில மாதங்கள் முன்பே லவ் டுடே படக்குழு இப்படம் ஹிந்தியில் ரீமேக் பண்ணப்படும் என்று தெரிவித்தனர் சமீபத்தில் வெளிவந்த தகவல்களின்படி லவ் டுடே ஹிந்தி ரீமேக்கில் அமீர்கான் மகன் ஜுனைத் கான் மற்றும் ஸ்ரீதேவியின் மகள் குஷி கபூர் ஆகியோர் பிரதீப் – இவானா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

மேலும் படத்தை அத்வைத் சந்தன் இயக்குவார் என்றும் கூறப்படுகிறது. இது அனைத்து விதமான சமூக வலைத்தளத்திலும் வைரலாகி வருகிறது.