கங்குவா தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நஷ்டம்.. எத்தனை கோடி தெரியுமா? லேட்டஸ்ட் தகவல் இதோ..!
கங்குவா தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியானது. சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருந்த இந்த திரைப்படத்திற்கு ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார்.
மேலும் திஷா பதானி, கருணாஸ், யோகி பாபு, நட்டி நட்ராஜ், பாபி தியோல்,கார்த்தி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இந்த திரைப்படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர்.
ஆனால் படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாமல் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. இதனால் படத்தின் தயாரிப்பாளரான ஞானவேல் ராஜாவுக்கு 143 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்தத் தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.