நடிகை லாஸ்லியா பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிற்குள் செல்ல உள்ளார்.

Losliya Entry in Bigg Boss Ultimate : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. ஹாட்ஸ்டார் இல் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்து சீசன்கள் இதில் பங்கேற்ற போட்டியாளர்களில் சிலர் தேர்வு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து ஷாரிக், வனிதா விஜயகுமார், அபிநய், சுஜா வருணி ஆகியோர் வெளியேறியுள்ளனர். மேலும் சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் கலக்கப்போவது யாரு சதீஷ் ஆகியோர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே சென்று உள்ளனர்.

இந்த நிலையில் இந்த வாரம் மேலும் ஒரு போட்டியாளராக லாஸ்லியா பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.