ஹீரோவாக நடிக்கிறார் லோகேஷ் கனகராஜ்: இயக்குனர் யார் தெரியுமா?

முன்னணி இயக்குனரான லோகேஷ் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்..

‘மாநகரம்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ்.அடுத்ததாக ‘கைதி’
விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ கமல்ஹாசன் நடிப்பில் ‘விக்ரம்’ என கவனம் ஈர்த்தார்.

மீண்டும் விஜய் நடிப்பில் ‘லியோ’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் கூட்டணி அமைத்தார். அவர் இதுவரை இயக்கிய ஐந்து படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட்டாகின. தற்போது ரஜினி நடிப்பில் ‘கூலி,’ படம் உருவாகி வருகிறது. இப்படம் ஆகஸ்ட. 14-ந்தேதி ரிலீஸாகிறது.

இந்நிலையில், லோகேஷ் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு ஸ்ருதிஹாசன் உருவாக்கிய ‘இனிமேல்’ என்கிற ஆல்பம் பாடலில் ஸ்ருதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதனால் அவருக்கு ஹீரோவாக நடிக்க கோலிவுட்டில் அடுத்தடுத்த வாய்ப்பு வந்தது.

அவ்கையில், அவர் ஹீரோவாக அறிமுகமாகும் திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ளார். ராக்கி, சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் போன்ற படங்களை இயக்கியவர் அருண். தற்போது இளையராஜா பயோபிக்கை இயக்கும் பணிகளில் உள்ளார்.

அப்படத்தின் பணிகள் முடித்த பின்னர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கும் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

lokesh kanagaraj hero in arun matheswaran direction
lokesh kanagaraj hero in arun matheswaran direction