கைதி படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் அப்படத்தில் நடித்துள்ள கார்த்திக் ஆகியோருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

மாநகரம் படம் மூலம் கவனம் ஈர்த்த லோகேஷ் கனகராஜ் கார்த்தியை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் கைதி. இப்படம் நேற்று வெளியானது. ஒரு பக்கம் விஜயின் பிகில் வெளியாகி வசூலை வாரி வரும் வேலையில் இப்படம் என்னாவாகும் என்கிற பயம் படக்குழுவினருக்கு இருந்தது.

ஆனால் இப்படம் தொடர்பாக நேர்மறையான விமர்சனங்கள் நேற்று காலை முதலே சமூக வலைத்தளங்களில் தென்பட்டது. இப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் படத்தின் திரைக்கதையை வெகுவாக பாராட்டியிருந்தனர். படம் தற்போது நல்ல வசூலையும் பெற்று வருகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ள கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘ இப்படத்திற்கு வரவேற்பு அளித்ததற்கு நன்றி.. இப்படத்தை தயாரித்து எனக்கு வாய்ப்பளித்த பிரபு சார் மற்றும் கார்த்திக் சாருக்கு நன்றி’ என பதிவிட்டுள்ளார்.