கமல்ஹாசன் விக்ரம் திரைப்படம் தள்ளிப் போவதாக வெளியான தகவலுக்கு லோகேஷ் கனகராஜ் புகைப்படத்துடன் விளக்கம் அளித்துள்ளார்.

Lokesh Kanagaraj Explain on Vikram Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள விக்ரம் படத்தை இயக்க உள்ளார்.

இந்த படத்தில் கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் பகத் பாசில் நடிக்க உள்ளார். கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தின் சர்ச்சைகள் முடிவுக்கு வராததால் விக்ரம் படம் தள்ளிப் போவதாக கூறப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் விக்ரம் படத்தில் நடிப்பதற்கு முன்னதாக பாபநாசம் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் தற்போது விக்ரம் படத்தின் ஸ்டண்ட் மாஸ்டராக அன்பு அறிவு பணியாற்ற ஒப்பந்தமாகி இருப்பதாக கமல்ஹாசனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.