தளபதி 67 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பிரபல நடிகர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் பீஸ்ட் திரைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து தற்போது வாரிசு என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

தளபதி 67 படத்தில் இணைந்த பிரபல நடிகர்.. அதிரடியாக அறிவித்த லோகேஷ் - யார் அவர் தெரியுமா??

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக மீண்டும் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடித்திருப்பது கிட்டத்தட்ட 90% உறுதியாகி உள்ளது. இந்தப் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளியாக உள்ளது.

இப்படியான நிலையில் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தில் மன்சூர் அலிகான் நடிக்க இருப்பதை உறுதி செய்துள்ளார். லோகேஷ் கனகராஜ் நடித்த பேட்டி ஒன்றில் மன்சூர் அலிகானை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரை மாதிரி லட்சத்தில் ஒருவர் தான் இருக்க முடியும். அவருக்காக என்னுடைய படத்தில் அற்புதமான கதாபாத்திரம் ஒன்றை உருவாக்கி உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

தளபதி 67 படத்தில் இணைந்த பிரபல நடிகர்.. அதிரடியாக அறிவித்த லோகேஷ் - யார் அவர் தெரியுமா??

ஆனால் இந்த விஷயத்தை நான் இன்னும் அவரிடம் சொல்லவும் இல்லை படத்தில் நடிக்கிறீர்களா என கேட்கவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். இதனால் தன்னுடைய அடுத்த படத்திற்காக மன்சூர் அலிகானுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவரை நிச்சயம் நடிக்க வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.