விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரம் பற்றி லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள திரைப்படம் விக்ரம்.

விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியது இவரா? லோகேஷ் கனகராஜ் சொல்வது என்ன? ஷாக் தகவல்

சுமார் 400 கோடிக்கும் அதிகமாக வசூல் வேட்டையாடிய இந்த படத்தில் கமல்ஹாசனின் கதாபாத்திரத்திற்கு அடுத்ததாக அதிகம் பேசப்பட்டது ரோலக்ஸ் கதாபாத்திரம் தான். சிறிது நேரம் மட்டுமே வந்த கதாபாத்திரம் என்றாலும் இதில் சூர்யா மிரட்டலான நடிப்பை கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் அளித்த பேட்டி ஒன்றில் ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு மலையாள நடிகர்கள் யாரையாவது தேர்வு செய்ய வேண்டும் என்றால் யாரை தேர்ந்தெடுப்பீர்கள் என கேட்க அவர் சட்டென பிரிதிவிராஜ் பெயரை கூறியுள்ளார்.

விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியது இவரா? லோகேஷ் கனகராஜ் சொல்வது என்ன? ஷாக் தகவல்

இது குறித்து பிரித்திவிராஜிடம் கேட்க லோகேஷ் என் பெயரை சொன்னதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி என சொல்ல விக்ரம் படத்தை நீங்கள் மலையாளத்தில் எடுத்தால் ரோலஸ் கதாபாத்திரத்திற்கு யாரை தேர்வு செய்வீர்கள் என கேட்க அவர் துல்கர் சல்மான் பெயரை தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவரும் பேட்டியில் ரோலக்ஸ் கதாபாத்திரம் குறித்து பேசிய இந்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.