நாளை வெளியாகும் தமிழ் படங்களின் லிஸ்ட்.. நீங்க எந்த படத்துக்காக வெயிட்டிங்..!
நாளை வெளியாகும் தமிழ் படங்களின் லிஸ்ட் குறித்து பார்க்கலாம்.

தமிழ் சினிமாவின் வாராவாரம் வெள்ளிக்கிழமை ஆனாலே படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் மார்ச் 7ஆம் தேதி அதாவது நாளை திரையரங்குகளில் வெளியாக போகும் திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் நிறம் மாறும் உலகில் என்ற திரைப்படம் நாளை வெளியாகியிருக்கிறது இதில் யோகி பாபு,ரியோ ராஜ், சுரேஷ் மேனன், சாண்டி மாஸ்டர் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இயக்குனர் ஜோஸ்வா சேதுராமன் இயக்கத்தில் ஜென்டில்வுமன் என்ற திரைப்படமும் நாளை வெளியாக உள்ளது இந்த படத்தில் பிக் பாஸ் லாஸ்லியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் ஜிவி பிரகாஷ் மற்றும் திவ்யபாரதி இணைந்து நடித்துள்ள கிங்ஸ்டன் திரைப்படமும் நாளை வெளியாக உள்ளது.
இந்த மூன்று திரைப்படங்களில் உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் எது நீங்க எந்த படத்துக்காக வெயிட்டிங் என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
