Leo - Mark Antony
Leo - Mark Antony

மார்க் ஆண்டனி படத்திற்கு நடந்தது போலவே விஜய் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வரும் அக்டோபர் 19-ம் தேதி ஆயுத பூஜை விருந்தாக லியோ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெறும் என தகவல் வெளியாகி அதற்கான ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை என தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டிருந்தது.

மேலும் இதற்கு அரசியல் மிரட்டல்கள் எதுவும் காரணம் இல்லை எனவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது. இதேபோல் மார்க் ஆண்டனி படத்தின் இசை வெளியீட்டு விழாவும் தடைப்பட்ட விஷயம் தற்போது பேசும் பொருளாகி உள்ளது.

விஷால் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் ரசிகர்களுக்கு மத்தியில் மிகப் பிரமாண்டமாக நடைபெற இருந்தது. திடீரென இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து விஷால் தரப்பினர் வெளியிட்டிருந்த அந்த சமயம் வைரலானது.

அதேபோல் தற்போது லியோ படத்திற்கு நடந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் தடைகளை தாண்டி மார்க் ஆண்டனி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

லியோ திரைப்படமும் இதே போல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வசூல் சாதனை படைக்கும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.