லியோ படத்தில் விஜய் வனத்துறை அதிகாரியாக நடித்து வருவதாக லீக்கான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகிய வெற்றி பெற்ற வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது லியோ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாகி வரும் நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜயின் பிறந்தநாள் விருந்தாக வெளியானது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் சூட்டிங் ஆந்திராவில் உள்ள தலக்கோணா அருவி அருகே நடந்து வரும் நிலையில் விஜய் பார்க்க ரசிகர்கள் அந்த பகுதியை சூழ்ந்துள்ளனர். தன்னை பார்க்க வந்த ரசிகர்களுக்கு விஜய் கையசைத்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதே சமயம் இந்த படத்தில் நடிகர் விஜய் செம்மர கடத்தல் கும்பலை வளைத்து பிடிக்கும் வனத்துறை அதிகாரியாக விஜய் நடித்து வருகிறார் எனவும் தகவல் ஒன்று பரவி வருகின்றன. இதனால் இந்த படம் செம்மர கடத்தலை மையமாகக் கொண்டு உருவாகிறதா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.